ஊடகப்பணிக்காக உயிரைக் கொடுத்தவர்கள்!

மே10, 2009

Untitled-1

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டமும் குடாநாட்டு ஊடகத்துறையின் வரலாறும் ஒன்றோடொன்று நேரடி தொடர்புபட்டவை. மாறிமாறி ஆட்சியேறும் அரசுகளும்  அவர்களது படைகளும்இ துணை ஆயுதக்குழுக்களும் நாளிதழ்களை தமது கைகளினுள் வைத்துக்கொள்ள முற்படுகின்றன. குடாநாட்டு மக்களது தகவலறியும் சுதந்திரத்தை முடக்குவதும்இ தகவல் உரிமைக்கான ஏகபோக உரிமைளை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ளவும் இவை முற்படுகின்றது.


நாளிதழ் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலைகள் ஆட்கடத்தல்கள்இ காணாமற்போகல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் எண்பவை கடந்த மூன்று தசாப்தங்களாகத் தொடர்கின்றன. மறுபுறத்தே காகிதாதிகளுக்கான தட்டுப்பாடும் தொடர்கின்றது. உலகிலேயே ஊடகவியலாளர்கள் அபாயகரமான பகுதியெனவும் அதிலும் முதன்மைப்பட்டியலில் இருப்பதாகவும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்து வருகின்றது. ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி குடாநாட்டின் ஊடகத்துறை தன்னை நிரூபித்தே வருகின்றது. இனிவரும் காலங்களிலும் அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடும்.